பண்டிகைக் காலம் ஆரம்பம்! சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள்!!

பண்டிகைக் காலம் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை
ஸ்மார்ட்போன்கள் - பிரதிபடம்
ஸ்மார்ட்போன்கள் - பிரதிபடம்
Published on
Updated on
1 min read

பண்டிகைக் காலம் தொடங்கியிருக்கும் நேரத்தில், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும், மக்கள் தங்களுக்குப் பிடித்த போன்களை குறைந்த விலையில் வாங்குவதற்கு ஏற்ப பல சலுகைகளை அறிவித்துள்ளன.

இந்த விழாக் காலத்தில், மக்கள் ஐஃபோன் 16 ப்ரோ, ரெட்மி நோட் 14 முதல் சாம்சங் காலக்ஸி எஸ்24 அல்ட்ரா வரை பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் வாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மிகப்பெரிய இ-வணிக நிறுவனங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள் என அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளது.

கூகுள் பிக்சல் 9

சலுகை விலை: ரூ.34,999 (உண்மையான விலை ரூ.79,999)

விற்பனை : ப்ளிப்கார்ட் - செப்.23 முதல்

சிறப்பம்சங்கள் : கூகுளின் டென்சோர் ஜி4 சிப்புடன் பிக்சல் 9 வசதி. 12 ஜிபி ராம், 50 எம்.பி. கேமரா. ஏஐ தொழில்நுட்பம்.

ஐஃபோன் 16 ப்ரோ

சலுகை விலை: ரூ.98,190 (சலுகை ரூ.21,710)

விற்பனை : விஜய் சேல்ஸ் (ஐஃபோன் 17 ப்ரோ அறிமுகத்துக்கு முன்பு)

சிறப்பம்சங்கள் : புதிய ஐஃபோன் வகை மாடல்கள் அறிமுகத்தால், ஐஃபோன் 16 ப்ரோ விலையில் தள்ளுபடி. மிக நவீன வடிவமைப்பு, மிகச் சிறப்பான பர்ஃபாமென்ஸ், தனிச்சிறப்பு வாய்ந்த காமெரா.

சாம்சங் காலக்ஸி எஸ்24 அல்ட்ரா

சலுகை விலை: விலையில் அதிகபட்சம் 40% வரை தள்ளுபடி

விற்பனை : அமேசான் - செப்.23 முதல்

சிறப்பம்சங்கள் : உயர்தர வசதிகளுடன் டைனமிக் அமோல்டு டிஸ்ப்ளே, 50 எம்பி கேமரா, அதிவிரைவு சார்ஜர்.

ஐஃபோன் 15

சலுகை விலை: ரூ.6 ஆயிரம் வரை சலுகை

விற்பனை : எஸ்பிஐ அட்டையில் வாங்கும் போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்.

சிறப்பம்சங்கள் : ஐஃபோன் 15 மாடல் வாங்குவோருக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. ஆப்பிள் போனை குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பு

ஷாவ்மி ரெட்மி நோட் 14 சீரிஸ்

சலுகை விலை: அதிகபட்சம் 3 ஆயிரம் வரை

விற்பனை : ஷாவ்மியின் விழாக்கால சலுகை

சிறப்பம்சங்கள் : மிகப்பெரிய டிஸ்ப்ளே கொண்ட செல்போன்கள் பட்ஜெட் விலையில். சிறப்பான கேமரா, நீண்டநாள் பேட்டரி வாழ்நாள். பணத்துக்கு மதிப்பு கொடுக்கும் செல்போன்கள்.

Summary

Smartphones on sale at discounted prices as festive season begins

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com