புதுதில்லி: ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமானது, இன்றைய வர்த்தகத்தில் திறந்த பரிவர்த்தனைகள் மூலம் லக்ஷ்மி டென்டலில் கிட்டத்தட்ட 3 சதவிகித பங்குகளை சுமார் ரூ.49 கோடிக்கு வாங்கியுள்ளது.
மொத்த பரிவர்த்தனையால், லக்ஷ்மி டென்டலின் பங்குகள் 0.25 சதவிகிதம் உயர்ந்து. என்எஸ்இ-யில் ரூ.306.70 ஆகவும், முடிவில் பங்குகள் 0.93 சதவிகிதம் சரிந்து பிஎஸ்இ-யில் ரூ.303.25 ஆக நிறவடைந்தது.
பிஎஸ்இ மற்றும் என்எஸ்இயின் மொத்த ஒப்பந்த தரவுகளின்படி, ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் என்எஸ்இ-யில் 8.62 லட்சம் ஈக்விட்டி பங்குகளை வாங்கிய நிலையில், மேலும் 7.38 லட்சம் பங்குகளை கைபற்றியது. இதனையடுத்து நிறுவனத்தின் மொத்த கையிருப்பு 2.91 சதவிகிதமாக உயர்ந்தது. அதன் பரிவர்த்தனை சுமார் ரூ.48.51 கோடி ஆகும். சராசரியாக ரூ.303 விலையில் இந்த பரிவர்தனை செயல்படுத்தப்பட்டது.
இதற்கிடையில், அபுதாபி முதலீட்டு நிர்வகமானது, மொத்தம் 11.16 லட்சம் லட்சுமி டென்டலின் பங்குகளை ரூ.33.82 கோடிக்கு விற்பனை செய்தது. விற்பனைக்குப் பிறகு லட்சுமி டென்டலில் அபுதாபி முதலீட்டு 3.18 சதவிகிதத்திலிருந்து 1.15 சதவிகிதமாகக் சரிந்தது.
பங்குகள் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-யில் தலா ரூ.303 முதல் ரூ.303.01 வரை வர்த்தகமானது.
இதையும் படிக்க: ஆகஸ்ட் மாதம் மொத்த பணவீக்கம் மீண்டும் உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









