எம் & எம் வாகன விற்பனை சரிவு
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதம் 1 சதவீதம் குறைந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதம் நிறுவன வாகனங்களின் மொத்த விற்பனை 75,901-ஆக பதிவாகியுள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 1 சதவீதம் குறைவு.
மதிப்பீட்டு மாதத்தில் பயணிகள் வாகனங்கள் பிரிவில், நிறுவனத்தின் பயன்பாட்டு வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 9 சதவீதம் குறைந்து 39,399-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 43,277-ஆக இருந்தது.
அந்த மாதத்தில் நிறுவன டிராக்டா்களின் விற்பனை (உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி) 28 சதவீதம் உயா்ந்து 28,117-ஆக உள்ளது. முந்தைய 2024 ஆகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கை 21,917-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.