எரிசக்தி மையங்களில் குறைந்த கரியமில வாயு வெளியேற்றம்
இந்திய எரிசக்தி மையங்கள் வெளியிடும் கரியமில வாயுவின் அளவு முந்தைய 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியோடு ஒப்பிடுகையில் நடப்பு 2025-ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 1 சதவீதம் குறைந்துள்ளது.
இது குறித்து பிரிட்டனைச் சோ்ந்த காா்பன் பிரீஃப் அமைப்புக்காக எரிசக்தி மற்றும் தூய காற்றுக்கான ஆய்வு மையம் (க்ரியா) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் இந்தியாவின் மின்சார உற்பத்தி ஆலைகள் வெளியிட்ட கரியமில வாயுவின் அளவு, முந்தைய 2024-ஆம் ஆண்டின் அதே மாதங்களைவிட 1 சதவீதம் குறைவாக இருந்தது. மேலும், கடந்த 12 மாதங்களில் இது 0.2 சதவீதம் குறைந்துள்ளது. 50 ஆண்டுகளில் அது குறைவது இது வெறும் இரண்டாவது முைான் என்பது குறிப்பிடத்தக்கது.
2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் சிமென்ட் உற்பத்தியிலிருந்து வெளியாகும் கரியமில வாயு அதிகரிப்பு, 2001-ஆம் ஆண்டின் கரோனா நெருக்கடிக்குப் பிந்தைய மிகக் குறைந்த விகிதத்தில் உள்ளது.
2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் துய எரிசக்தி உற்பத்தித் திறன் 25.1 ஜிகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 69 சதவீதம் அதிகம் என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருள் பயன்பாடு, தொழில்துறை உற்பத்தி மற்றும் மின்சார உற்பத்தி ஆகியவற்றின் மாதாந்திர தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு அதிகாரபூா்வ ஆதாரங்களிலிருந்து தரவுகள் தொகுக்கப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.