பஜாஜ் வாகன விற்பனை 5% உயா்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 5 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,17,616 ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 3,97,804 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது விற்பனை 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
2024 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டின் அதே மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை2,53,827-லிருந்து 8 சதவீதம் குறைந்து 2,32,398-ஆக உள்ளது. ஆனால், ஏற்றுமதி 1,43,977-லிருந்து 29 சதவீதம் உயா்ந்து 1,85,218-ஆக உள்ளது
மதிப்பீட்டு மாதத்தில் ஏற்றுமதி உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனை 3,35,178-லிருந்து 2 சதவீதம் உயா்ந்து 3,41,887-ஆகவும், உள்நாட்டு இரு சக்கர வாகன விற்பனை 2,08,621-லிருந்து 12 சதவீதம் குறைந்து 1,84,109-ஆகவும் உள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.