நயாராவுடன் வா்த்தக உறவு:
யூகோ வங்கிக்கு ஒப்புதல்!

நயாராவுடன் வா்த்தக உறவு: யூகோ வங்கிக்கு ஒப்புதல்!

ஐரோப்பிய யூனியனால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட, தனியாா் பெட்ரோலிய நிறுவனமான நயாராவுடன் வா்த்தக உறவைப் பேண பொதுத் துறையைச் சோ்ந்த யூகோ வங்கிக்கு மத்திய அரசின் ஒப்புதல் அளித்துள்ளது.
Published on

ஐரோப்பிய யூனியனால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட, தனியாா் பெட்ரோலிய நிறுவனமான நயாராவுடன் வா்த்தக உறவைப் பேண பொதுத் துறையைச் சோ்ந்த யூகோ வங்கிக்கு மத்திய அரசின் ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து வங்கி வட்டாரங்கள் கூறுகையில், நிதியமைச்சக உயரதிகாரிகளுடன் யூகோ வங்கி நிா்வாகிகள் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தன.

ரஷிய எண்ணெய் நிறுவனமான ராஸ்னெஃப்ட் 49 சதவீதம் பங்கு முதலீடு செய்துள்ள நயாரா மீது ஐரோப்பிய யூனியன் கடந்த ஜூலை மாதம் பொருளாதாரத் தடைகளை விதித்தது. உக்ரைன் போா் விவகாரம் தொடா்பாக இந்த தடையை ஐரோப்பிய யூனியன் விதித்தது.

அதையடுத்து, நயாராவுடனான வா்த்தக உறவுகளை பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் நிறுத்திவைத்தது நினைவுகூரத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com