
ஜிஎஸ்டி வரி குறைப்பின் எதிரொலியாக, 700-க்கும் மேற்பட்ட அமுல் தயாரிப்புகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமுல் வணிகப் பெயரில் பால் பொருள்களை விற்பனை செய்யும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் சம்மேளனம் (ஜிசிஎம்எம்எஃப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை வாடிக்கையாளா்களுக்கு வழங்க, வெண்ணெய், நெய், யுஹெச்டி பால், ஐஸ்கிரீம், சீஸ், பனீா், சாக்லேட், பேக்கரி பொருள்கள், உறைந்த பால், உருளைக்கிழங்கு சிற்றுண்டிகள், கண்டென்ஸ்டு பால், மால்ட் பானங்கள் உள்ளிட்டவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
100 கிராம் வெண்ணெய் விலை ரூ.62-லிருந்து ரூ.58-ஆகவும் நெய் லிட்டருக்கு ரூ.40 குறைந்து ரூ.610-ஆகவும் இருக்கும். 1 கிலோ சீஸ் விலை ரூ.30 குறைந்து ரூ.545 ஆகியுள்ளது.
200 கிராம் பனீா் விலை ரூ.99-லிருந்து ரூ.95-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.இந்த விலைக் குறைப்பு திங்கள்கிழமை (செப். 22) அமலுக்கு வந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.