இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டாா் சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிதமாகச் சரிந்தது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனம் 5,34,861 இரு சக்கர வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது சற்று குறைவு. அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 5,38,852-ஆக இருந்தது.
2024 ஆகஸ்டில் 4,91,678-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை இந்த ஆகஸ்டில் 4,81,021-ஆகக் குறைந்துள்ளது. ஏற்றுமதி 47,174-லிருந்து 53,840-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் மின் நுகர்வு 4% உயர்வு!

மார்ச் மாதத்தில் மாருதி சுசுகி விற்பனை 16.72% உயர்வு!

வாகன சோதனையில் ரூ. 2.29 லட்சம் பறிமுதல்

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு


