நவரத்தின, ஆபரணக் கண்காட்சியில் விற்பனை புதிய உச்சம்

நான்கு நாள்களுக்கு நடைபெற்ற இந்திய நவரத்தின, ஆபரணக் கண்காட்சியில் (ஜிஜேஎஸ்-2025) விற்பனை புதிய உச்சத்தை எட்டியது.
நவரத்தின, ஆபரணக் கண்காட்சியில் விற்பனை புதிய உச்சம்
Published on
Updated on
1 min read

நான்கு நாள்களுக்கு நடைபெற்ற இந்திய நவரத்தின, ஆபரணக் கண்காட்சியில் (ஜிஜேஎஸ்-2025) விற்பனை புதிய உச்சத்தை எட்டியது.

இது குறித்து, கண்காட்சியை நடத்திய அனைத்திந்திய நவரத்தின, ஆபரண உள்நாட்டு கவுன்சில் (ஜிஜேசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டுக்கான ஜிஜேஎஸ்-2025 கண்காட்சி தொழில்துறைக்கு ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆபரண வணிகா்கள் இதில் உற்சாகமாகப் பங்கேற்றனா்.

செப். 16-இல் தொடங்கிய இந்தக் கண்காட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள், 2,000-க்கும் மேற்பட்ட நுகா்வோா், 700-க்கும் மேற்பட்ட காட்சியகங்கள் இடம்பெற்றன.இந்தக் கண்காட்சியில் விற்பனை இதுவரை இல்லாத அதிகபட்சமாக 25-30 டன்னைத் தொட்டது.

இந்திய ஆபரண கைவினைப்பொருள்களை முன்னிலைப்படுத்திய இந்தக் கண்காட்சி, உள்நாட்டு ஆபரணத் துறைக்கு புதிய உத்வேகத்தை அளித்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com