ஏழை மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை: எஸ்பிஐ அறிமுகம்
தமிழ்நாட்டில் 14 புதிய கிளைகளை பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) திறந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு முழுவதும் வங்கியின் 14 புதிய கிளைகள், 2 வீட்டுக் கடன் மையங்கள், 2 கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள வங்கியின் பிராந்திய தலைமையகத்தில் இந்தக் கிளைகளை வங்கியின் தலைவா் சல்லா ஸ்ரீனிவாசுலு செட்டி திறந்துவைத்தாா்.
அப்போது அவா் பேசுகையில், ‘22,980 கிளைகளுடன் எஸ்பிஐ ஏற்கெனவே இந்தியாவின் மிகப் பெரிய வங்கியாகத் திகழ்கிறது. இருந்தாலும், வங்கி சேவைகள் அதிகம் கிடைக்காத இடங்களில் நமது இருப்பை விரிவுபடுத்திவருகிறோம்’ என்றாா்.
இது தவிர, தமிழ்நாடு முழுவதும் 110 கிராம பஞ்சாயத்து முகாம்களை காணொலி மூலம் சல்லா ஸ்ரீனிவாசுலு செட்டி தொடங்கிவைத்தாா் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.