வர்த்தக ஆரம்பத்தில் உயர்ந்தும் பிறகு சரிந்தும் முடிந்த பங்குச் சந்தை!

சென்செக்ஸ் 57.87 புள்ளிகள் குறைந்து 82,102.10 ஆகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 32.85 புள்ளிகள் சரிந்து 25,169.50 ஆக நிலைபெற்றது.
Stock Market Update
மும்பை பங்குச் சந்தை கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மும்பை: அமெரிக்க எச்-1பி விசா கட்டணங்கள் கடுமையாக உயர்ந்த கவலைகளுக்கு மத்தியில், ஐடி மற்றும் ப்ளூ-சிப் தனியார் வங்கி பங்குகளை, முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததாலும், அதே வேளையில் அந்நிய நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சற்று உயர்ந்து பிறகு சரிவுடன் முடிவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், லாபம் மற்றும் இழப்புகளுக்கு இடையில் ஊசலாடிய பிறகு சென்செக்ஸ் அதிகபட்சமாக 82,370.38 புள்ளிகளுடனும் குறைந்தபட்சமாக 81,776.53 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 57.87 புள்ளிகள் குறைந்து 82,102.10 ஆகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 32.85 புள்ளிகள் சரிந்து 25,169.50 ஆக நிலைபெற்றது.

சென்செக்ஸில் அல்ட்ராடெக் சிமென்ட், டைட்டன், ஏசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், ட்ரெண்ட் மற்றும் சன் பார்மா ஆகியவை சரிந்தும் மாருதி, மஹிந்திரா & மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன. இருப்பினும், ஆட்டோ மற்றும் பொதுத்துறை வங்கியின் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதால் இழப்பு குறைத்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இன்றைய பங்குச் சந்தையில் 3,136 பங்குகள் வர்த்தகமான நிலையில் 1,329 பங்குகள் உயர்ந்தும் 1,714 பங்குகள் சரிந்தும் 93 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.

எச்1பி விசாக்களுக்கான கட்டணத்தை உயர்த்தும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டதை அடுத்து, புதிய விண்ணப்பதாரர்களுக்கு 1,00,000 அமெரிக்க டாலர்கள் செலுத்தும் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதும், கட்டண அச்சுறுத்தல்கள் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் நம்பிக்கைகளை பலவீனமாக்கியதால் நிஃப்டி ஐடி குறியீட்டில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.2,910.09 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

ஆசிய சந்தைகளில், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சற்றே சரிந்த நிலையில் தென் கொரியாவின் கோஸ்பி உயர்ந்து முடிவடைந்தது.

அமெரிக்க சந்தைகள் நேற்று உயர்ந்து முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.60 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு $66.17 ஆக உள்ளது.

இதையும் படிக்க: டிரம்ப்பின் 25% வரி விதிப்பால் என்னென்ன துறைகளுக்கு அதிக பாதிப்பு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com