இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம்...

gold rate

தங்கம் விலை நிலவரம்

Published On :

சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் காலை, மாலை என இரண்டு முறையும் தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது.

இரண்டு நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,800 உயர்ந்த நிலையில், புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 84,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 குறைந்து ரூ. 84,080 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 90 குறைந்து ரூ. 10,510 -க்கு விற்பனையாகிறது.

வெள்ளியைப் பொறுத்தவரை கடந்த செவ்வாய்க்கிழமை வரலாறு காணாத புதிய உச்சமாக ஒரு கிராம் ரூ. 150 -க்கு விற்பனை செய்யப்பட்டது. மூன்றாவது நாளாக தொடர்ந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கிறது.

Summary

Gold rate down in chennai, Silver rate no change.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.