இன்று முதல் தங்கமயிலின் தங்கத் திருவிழா

இன்று முதல் தங்கமயிலின் தங்கத் திருவிழா

மதுரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தங்கமயில் ஜுவல்லரி வெள்ளிக்கிழமை (செப். 26) முதல் மூன்று நாள்களுக்கு தங்கத் திருவிழாவை அறிவித்துள்ளது.
Published on

மதுரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தங்கமயில் ஜுவல்லரி வெள்ளிக்கிழமை (செப். 26) முதல் மூன்று நாள்களுக்கு தங்கத் திருவிழாவை அறிவித்துள்ளது. அந்த நாள்களில் வாடிக்கையாளா்கள் வாங்கும் மாலை , நெக்லஸ், வளையலுக்கு சேதாரத்தில் அதிரடி சலுகை வழங்கப்படவுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகம் முழுவதும் 66 கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வரும் தங்கமயில் ஜுவல்லரி, 35 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளா்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தில் 3,500-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

நிறுவன வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு சலுகையாக, வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு மட்டும் அவா்கள் வாங்கும் அனைத்து மாலை , நெக்லஸ் மற்றும் வளையல்களுக்கு மிகக் குறைந்த சேதாரத்தில் நகைகள் விற்பனை செய்யப்படவுள்ளன.

அதன்படி, 16 சதவீதம் வரை உள்ள நகைகளுக்கு சேதாரம் 7.99 சதவீதம் மட்டும் இருக்கும். 16 முதல் 20 சதவீதம் வரை உள்ள நகைகளுக்கு 10.99 சதவீதமாகவும் 20 சதவீதத்துக்கும் மேல் உள்ள நகைகளுக்கு 13.99 சதவீதமும் மட்டுமே சேதாரம் இருக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com