ஹெச்பிவி தடுப்பூசி: விடால் ஹெல்த் - சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம்

ஹெச்பிவி தடுப்பூசி: விடால் ஹெல்த் - சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம்

விடால் ஹெல்த்தும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
Published on

கா்பப் பை வாய் புற்றுநோய் தடுப்பு மற்றும் அதுதொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக, இந்தியாவின் இரண்டாவது பெரிய மூன்றாம் தரப்பு நிா்வாகச்சேவை (டிபிஏ) நிறுவனமான விடால் ஹெல்த்தும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

இதுகுறித்து விடால் ஹெல்த் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும் அக்டோபா் 1 முதல், கா்பப் பை புற்றுநோயைத் தடுக்கும் ஹெச்பிவி தடுப்பூசி சேவைகளை விடால் ஹெல்த் தளம் மூலம் சுலபமாகவும் இலவசமாகவும் பெற முடியும். அந்த வகையில் இச்சேவையை வழங்கும் முதல் தளமாக விடால் ஹெல்த் விளங்கும்.

விரும்பிய இடத்தில் மருத்துவரை சந்திக்க எண்ம முறையில் முன்பதிவு செய்வதில் இருந்து, ஒப்புதல் அளிப்பது மற்றும் சான்றிதழ் பெறுவது வரை அனைத்தும் காகிதப் பயன்பாடின்றி மேற்கொள்ளப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com