
ரியல்மி நிறுவனம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய பி-3 லைட் 5ஜி இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பி-3 லைட் 5ஜி
ரியல்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில், நவீன அம்சங்களைக் கொண்டுள்ளது. இது செப்டம்பர் 22 முதல் ஃபிலிப்கார்ட், ரியல்மி.காம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் கிடைக்கும்.
சிறப்பம்சங்கள்..
இது லில்லி வைட், பர்பிள் பிளாசம் மற்றும் மிட்நைட் லில்லி ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றது.
• ஆண்டிராய்டு 15 இடம்பெற்றுள்ளது.
• 4 ஜிபி மற்றும் 6 ஜி ரேம் வசதி
• 128 ஜிபி ஸ்டோரேஜ்
• 6.67 அங்குல தொடுதிரை
• ரெசல்யூசன் 1604 * 720 பிக்சல்
• 246 பிபிஐ கிராபிக்ஸ்
• கேமரா முன்பக்கம் 8 மெகா பிக்சல், பின்பக்கம் 32 மெகா பிக்சல்
• 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் 45 வாட் வேகமான சார்ஜிங் வசதி
• மீடியாடெக் டைமென்சிட்டி 6300 பிராசசர்
• இதன் எடை 197 கிராம்
மொபைலின் விலை - ரூ. 10,499
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.