
தொழில்நுட்பப் படிப்பில் பெண்களின் பங்களிப்பு நான்கு மடங்காக உயர்ந்துள்ளது.
இது குறித்து யுஜிசி கல்வித் தளமான காலேஜ் வித்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தொழில்நுட்பப் படிப்பில் பெண்களின் பங்களிப்பு 2022-இல் 4 சதவீதமாக இருந்தது. அது 2025-ல் 17 சதவீதமாக உள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ), புரோம்ப்ட் என்ஜினீயரிங், இணைய பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி), ரோபாட்டிக்ஸ், டேட்டா சயன்ஸ் போன்ற ஆழ்ந்த தொழில்நுட்பத் துறைகளில் பெண்களின் பங்களிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது.
ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங் (எம்எல்) படிப்புகளில் பெண்களின் பங்களிப்பு 2024-ல் 5 சதவீதமாக இருந்தது, 2025-இல் நான்கு மடங்கு அதிகரித்து 20 சதவீதமாக உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏஐ படிப்புகளுக்கான தேவை 500 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில் பெண்கள் முக்கிய பங்களிப்பாளர்களாக உள்ளனர்.
சைபர் செக்யூரிட்டி எம்சிஏ படிப்பில் 25 சதவீதமும், ஜெனரேட்டிவ் ஏஐ முனைவர் படிப்பில் 15 சதவீதமும் பெண்கள் உள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.