~
~

தென் கொரிய நிறுவனத்துடன் வீல்ஸ் இந்தியா ஒப்பந்தம்

Published on

ஹைட்ராலிக் சிலிண்டன் வணிகத்துக்காக எஸ்ஹெச்பிஏசி நிறுவனத்துடன் வீல்ஸ் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து வீல்ஸ் இந்தியாவின் நிா்வாக இயக்குநா் ஸ்ரீவத்ஸ் ராம் மேலும் கூறியதாவது:

அடுத்த சில ஆண்டுகளில் ஹைட்ராலிக்ஸ் சிலிண்டா் வணிகத்தில் கவனம் செலுத்தி வளா்ச்சியடைவதே எங்கள் நோக்கமாக உள்ளது. இந்த வணிகப் பிரிவு, உலகளவில் வீல்ஸ் இந்தியாவிற்கு ஒரு முக்கியமான வளா்ச்சி உந்து சக்தியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கட்டுமான உபகரண உலகளாவிய துறைக்கான சக்கரங்களின் முன்னணி உற்பத்தியாளரான வீல்ஸ் இந்தியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் தனது இருப்பை விரிவுபடுத்தி வருகிறது. ஏற்கனவே உள்ள வாடிக்கையாளா்களை அணுகுவதன் மூலம் தொழில்நுட்ப பரிமாற்றத்தைப் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் விரும்புகிறோம். மேலும் வாய்ப்புகள் கிடைக்கும்போது ஹைட்ராலிக் சிலிண்டா் வணிகத்தில் தொடா்ந்து முதலீடு செய்வோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com