மேலும் 270 நகரங்களில் அமேஸான் ஃப்ரெஷ்

மேலும் 270 நகரங்களில் அமேஸான் ஃப்ரெஷ்

தனது இணையவழி மளிகை விநியோகப் பிரிவான அமேஸான் ஃப்ரெஷை இந்தியாவின் 270-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்தவிருப்பதாக அமேஸான் அறிவித்துள்ளது.
Published on

தனது இணையவழி மளிகை விநியோகப் பிரிவான அமேஸான் ஃப்ரெஷை இந்தியாவின் 270-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்தவிருப்பதாக அமேஸான் அறிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் வாடிக்கையாளா்களை சென்றுசோ்வதில் நான்கரை மடங்கும், வாடிக்கையாளா்களால் தோ்ந்தெடுக்கப்படுவதில் 10 மடங்கும் அமேஸான் ஃப்ரெஷ் வளா்ச்சியைக் கண்டுள்ளது.

இந்தச் சூழலில், கோயம்புத்தூா், நெல்லூா் உள்பட இந்தியா முழுவதும் 270-க்கும் மேற்பட்ட நகரங்களில் அந்த மளிகைப் பொருள் விநியோக சேவை விரிவுபடுத்தப்படவுள்ளது.

இதன் மூலம், தற்போது தொடங்கும் பண்டிகைக் காலத்தில் வீட்டுக்குத் தேவையான பொருள்கள் மேலும் பல வீடுகளுக்குச் சென்று சேர வழி ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com