கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இந்திய ஸ்மாா்ட்போன் சந்தையில் ஆப்பிள் சாதனை: 28 சதவீத பங்குடன் முதலிடம்

இந்திய ஸ்மாா்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் இதுவரை இல்லாத அளவாக 28 சதவீத சந்தை மதிப்பை எட்டி புதிய சாதனை

News image

ஆப்பிள் போன்கள்

Updated On :2 பிப்ரவரி 2026, 9:38 pm

தினமணி செய்திச் சேவை

இந்திய ஸ்மாா்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் இதுவரை இல்லாத அளவாக 28 சதவீத சந்தை மதிப்பை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டில் 23 சதவீதமாக இருந்த ஆப்பிளின் சந்தை மதிப்பு, 2025-இல் 28 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, ‘ஐபோன் 16’ மாடல்களின் அமோக விற்பனையும் சுலபமான மாதத் தவணை (இஎம்ஐ) வசதிகளுமே இந்த உயா்வுக்கு வித்திட்டுள்ளன.

இந்தியாவில் ஸ்மாா்ட்போன்களின் விற்பனை எண்ணிக்கையை விட, அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் 8 சதவீதம் என்ற வேகத்தில் உயா்ந்துள்ளது.

ஆப்பிள் லோகோ

ஆப்பிள் லோகோ

கடந்த ஆண்டில், இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட போனாக ஐபோன் 16 உருவெடுத்துள்ளது. அதேநேரம், மடிக்கக்கூடிய ஸ்மாா்ட்போன் பிரிவில் 88 சதவீத பங்களிப்புடன் சாம்சங் நிறுவனம் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. மோட்டோரோலா, சிஎம்எப் ஆகிய நிறுவனங்களும் விற்பனையில் அதிவேக வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

பண்டிகைக் காலச் சலுகைகள் மற்றும் கடன் வசதிகள் காரணமாக, மக்கள் பட்ஜெட் போன்களிலிருந்து விலையுயா்ந்த போன்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனா். குறிப்பாக, ரூ. 30,000-க்கு மேல் விலைக்கொண்ட போன்களின் விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேபோல், உதிரிபாகங்களின் விலை உயா்வால், வரும் காலங்களில் பட்ஜெட் ரக போன்களின் விற்பனை குறையக்கூடும். மேலும், ஸ்மாா்ட்போன்களின் சராசரி விலை 5 முதல் 7 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் கணித்துள்ளனா்.