நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேன்கைண்ட் பார்மா லாபம் ரூ.414 கோடியாக அதிகரிப்பு!

மேன்கைண்ட் பார்மா நிறுவனம் 3வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.414 கோடியாக உள்ளதாக தெரிவித்தது.

News image

மேன்கைண்ட் பார்மா

Updated On :3 பிப்ரவரி 2026, 2:57 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: பங்குச் சந்தையின் வலுவான செயல்பாட்டின் காரணமாக, மேன்கைண்ட் பார்மா, 3 வது காலாண்டு லாபம் 9.5% உயர்ந்து ரூ.414 கோடியாக உள்ளது.

கடந்த ஆண்டு, 3 வது காலாண்டில் நிறுவனம் ரூ.378 கோடி வரிக்குப் பிந்தைய லாபமாக ஈட்டி இருந்தது.

மதிப்பாய்வுக்குட்பட்ட காலாண்டில், செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.3,567 கோடியாக அதிகரித்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.3,199 கோடியாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் 3 வது காலாண்டில் உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் வருவாய் ரூ.3,046 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இருந்த ரூ.2,742 கோடியிலிருந்து இது 11% அதிகமாகும்.

இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில் மேன்கைண்ட் பார்மா பங்குகள் 4.3% உயர்ந்து பங்கு ஒன்றுக்கு ரூ.2,155.90ஆக வர்த்தகமானது.

Summary

Mankind Pharma posted a 9.5 per cent increase in consolidated profit after tax to Rs 414 crore for the December quarter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.