

புதுதில்லி: டிரென்ட் லிமிடெட் நிறுவனத்தின் டிசம்பர் வரையான காலாண்டின் நிகர லாபம் ரூ. 510.11 கோடியாக இருப்பதாக இன்று (பிப். 4) அறிவித்துள்ளது.
டாடா குழுமத்தின் சில்லறை வர்த்தக நிறுவனமான டிரென்ட் லிமிடெட், 2026 நிதியாண்டின் டிசம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2.73% அதிகரித்து ரூ. 510.11 கோடியாக இருப்பதாக இன்று தெரிவித்துள்ளது.
வெஸ்ட்ஸைட், ஜூடியோ மற்றும் ஸ்டார் உள்ளிட்ட நிறுவனங்களின் சில்லறை விற்பனைக் கடைகளை நடத்தி வரும் டிரென்ட் லிமிடெட், கடந்த ஆண்டு 3 வது காலாண்டில் அதன் நிகர லாபம் ரூ. 496.54 கோடியாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
3 வது காலாண்டில் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த ரூ. 4,656.56 கோடியிலிருந்து 14.78% அதிகரித்து ரூ. 5,345.06 கோடியாக உயர்ந்துள்ளது.
டிசம்பர் வரையான காலாண்டில் அதன் மொத்த செலவுகள் 14.25% அதிகரித்து ரூ. 4,673.67 கோடியாக இருந்ததாக தெரிவித்தது. மற்ற வருமானத்தையும் உள்ளடக்கிய மொத்த வருமானம், டிசம்பர் காலாண்டில் 13.87% அதிகரித்து ரூ. 5,363.85 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில், ட்ரென்ட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் நேற்றைய இறுதி விலையிலிருந்து 4.98% உயர்ந்து பங்கு ஒன்றுக்கு ரூ. 4,013.20 என்ற விலையில் வர்த்தகமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.