பங்குச்சந்தைகள் இன்று(பிப். 5) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,757.54 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.20 மணியளவில் சென்செக்ஸ் 336.66 புள்ளிகள் குறைந்து 83,481.03 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 116.60 புள்ளிகள் குறைந்து 25,659.40 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸ் பங்குகளில், இண்டிகோ, பாரத் எலக்ட்ரானிக்ஸ், எடர்னல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி ஆகியவை 2 சதவீதம் வரை சரிந்தன. மறுபுறம், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், எஸ்பிஐ, இன்ஃபோசிஸ், என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை 1.2 சதவீதம் வரை உயர்வுடன் வர்த்தகமாயின.
நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடுகள் முறையே 0.25 சதவீதம், 0.66 சதவீதம் சரிந்தன.
நிஃப்டி மெட்டல் குறியீடு 1.80 சதவீதம் என்ற பெரும் சரிவைச் சந்தித்தது. அதேநேரத்தில் பார்மா, ஆட்டோ, நிதி , ரியல் எஸ்டேட் துறைகளும் 0.9 சதவீதம் வரை சரிவுடன் வர்த்தகமாயின.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளான பிப். 1 பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்த நிலையில் இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் பிப். 3 அன்று நல்ல லாபத்துடன் நிறைவு பெற்றன.
தொடர்ந்து நேற்று(பிப். 4)பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கினாலும் இறுதியில் சற்றே உயர்வுடன் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Stock Market: Sensex slips 470 pts, Nifty below 25,640
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










