டிஷ் டிவி 3வது காலாண்டு நிகர இழப்பு ரூ. 276.23 கோடியாக அதிகரிப்பு!

டிஷ் டிவி இந்தியா லிமிடெட் அதன் ஒருங்கிணைந்த நிகர இழப்பு ரூ. 276.23 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
டிஷ் டிவி இந்தியா லிமிடெட் - கோப்புப் படம்
டிஷ் டிவி இந்தியா லிமிடெட் - கோப்புப் படம்
Updated on
1 min read

புதுதில்லி: நேரடி வீட்டு ஒளிபரப்புச் சேவை நிறுவனமான டிஷ் டிவி இந்தியா லிமிடெட், நிதியாண்டின் 3வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர இழப்பு ரூ. 276.23 கோடியாக அதிகரித்துள்ளதாக நேற்று தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் இதே காலாண்டில் நிறுவனம் ரூ. 46.54 கோடி நிகர இழப்பைச் சந்தித்தது. அதே வேளையில், டிசம்பர் காலாண்டில் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் 19.83% சரிந்து ரூ. 299.05 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ. 373.03 கோடியாக இருந்தது.

நிதியாண்டின் 3வது காலாண்டில் நிறுவனத்தின் மொத்தச் செலவுகள் 19.22% அதிகரித்து ரூ. 510.95 கோடியாக இருந்தது. அனைத்து வருமானங்களையும் உள்ளடக்கிய மொத்த வருமானம், டிசம்பர் காலாண்டில் 20.23% அதிகரித்து ரூ. 304.72 கோடியாக உள்ளது.

டிசம்பர் காலாண்டில், நிறுவனத்தின் சந்தா வருவாய் 32.2% சரிந்து ரூ. 224.5 கோடியாகவும், செயல்பாட்டு வருவாய் 19.8% சரிந்து ரூ. 299.1 கோடியாக இருந்தது. அதே வேளையில் நிறுவனத்தின் விளம்பர வருவாய் கிட்டத்தட்ட 2 மடங்காக அதிகரித்து ரூ. 4.8 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

டிஷ் டிவி இந்தியா லிமிடெட், மும்பை பங்குச் சந்தையில், பங்கு ஒன்றுக்கு ரூ. 3.39 ஆக நேற்று (வெள்ளிக்கிழமை) நிலைபெற்றது.

Summary

Dish TV India Ltd on Friday said its consolidated net loss widened to Rs 276.23 crore for the December quarter of FY26.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com