திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 72,377 கோடி டாலராக அதிகரிப்பு! புதிய உச்சம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 72,377 கோடி டாலராக அதிகரிப்பு...

News image
Updated On :8 பிப்ரவரி 2026, 6:30 am IST

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜன. 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 72,377.4 கோடி டாலராக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஜன. 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 1,436.1 கோடி டாலா் அதிகரித்து, 72,377.4 கோடி டாலராக உள்ளது.

ஜன. 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில், அது 805.3 கோடி டாலா் அதிகரித்து 70,941.3 கோடி டாலராக இருந்தது. இது செப்டம்பா் 2024-இல் பதிவான 70,489 கோடி டாலா் என்ற முந்தைய உச்சத்தை விஞ்சியது குறிப்பிடத்தக்கது.

ஜன. 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 49.3 கோடி டாலா் குறைந்து, 56,239.2 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 1,459.5 கோடி டாலா் அதிகரித்து 13,768.3 கோடி டாலராக உள்ளது.

சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 21.6 கோடி டாலா் அதிகரித்து 1,895.3 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 4.4 கோடி டாலா் அதிகரித்து 474.6 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.