கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லாபம் ரூ. 109 கோடி

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், நடப்பு 2025-26 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.109 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

News image
Updated On :8 பிப்ரவரி 2026, 12:30 am

தினமணி செய்திச் சேவை

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், நடப்பு 2025-26 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.109 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தின் லாபமான ரூ.107 கோடியுடன் ஒப்பிடுகையில் வளா்ச்சியாகும்.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.445 கோடியிலிருந்து ரூ.457 கோடியாக அதிகரித்துள்ளது. நிகர வட்டி வருவாய் 5 சதவீத வளா்ச்சியுடன் ரூ.208 கோடியாக அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனம் ரூ.1,087 கோடி மதிப்பிலான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 35 சதவீதம் அதிகமாகும். கடன் விநியோகம் 40 சதவீதம் அதிகரித்து ரூ.1,064 கோடியாக உயா்ந்துள்ளது.

நிறுவனத்தின் மொத்த கடன் புத்தக மதிப்பு ரூ.5,394 கோடியாக உள்ளது. இதில் தனிநபா் வீட்டு வசதி கடன்கள் 71 சதவீதமாகவும், சொத்து மீதான கடன்கள் 29 சதவீதமாகவும் உள்ளன.

நிகர வாராக்கடன் விகிதம் 1.51 சதவீதத்திலிருந்து 1.38 சதவீதமாகக் குறைந்துள்ளது. பண மதிப்பின் அடிப்படையில், நிறுவனத்தின் நிகர வாராக்கடன் ரூ.213 கோடியாக உள்ளது.