விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

சாம்சங்கில் அதிக பேட்டரி இதுதான்! கேலக்ஸி எஃப் 70இ அறிமுகம்!

அதீத பேட்டரி திறன் மற்றும் சுமூகமான மென்பொருள் பயன்பாடு ஆகியவை இந்த ஸ்மார்ட்போனின் சிறப்புகள்...

News image

கேலக்ஸி எஃப் 70இ - படம் / நன்றி - சாம்சங் இந்தியா

Updated On :9 பிப்ரவரி 2026, 1:02 pm

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று (பிப். 9) அறிமுகமாகியுள்ளது. பட்ஜெட் விலையில் கேலக்ஸி எஃப் 70இ அறிமுகமாகியுள்ளது.

அதீத பேட்டரி திறன் மற்றும் சுமூகமான மென்பொருள் பயன்பாடு ஆகியவை இந்த ஸ்மார்ட்போனின் சிறப்புகளாக முன்வைக்கப்படுகின்றன.

தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சாம்சங் நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளைஉருவாக்கி வருகிறது. அந்தவகையில் தற்போது சாம்சங் கேலக்ஸி எஃப் 70இ அறிமுகமாகியுள்ளது. பிப்ரவரி 17 முதல் சந்தையில் கிடைக்கும்.

சாம்சங் தளத்திலும், ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்திலும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

  • 4GB உள்நினைவகம் 128GB நினைவகம் - ரூ. 12,999.

  • 6GB உள்நினைவகம் 128GB நினைவகம் - ரூ. 14,999.

கேலக்ஸி எஃப் 70இ சிறப்பம்சங்கள்

  • 6.7 அங்குல எல்.இ.டி., எச்.டி., திரை உடையது

  • திரை சுமுகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொண்டது.

  • திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 800 nits திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • மீடியாடெக் டைமன்சிட்டி 6300 புராசஸர் உடையது.

  • ஆன்டிராய்டு 16 இயங்குதளம் (ஓ.எஸ்.) கொண்டது.

  • ஓ.எஸ். பாதுகாப்பு மேம்பாட்டிற்காக 6 ஆண்டுகள் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

  • பின்புறம் 50 மெகா பிக்சல் கேமா கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி பிரியர்களுக்காக 8 மெகா பிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

  • 6,000mAh பேட்டரி திறன் உடையது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 24 மணிநேரத்துக்கு மேலும் சார்ஜ் நீடிக்கும் என சாம்சங் நம்பிக்கை அளித்துள்ளது.

Summary

Samsung Galaxy F70e 5G launched in India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.