சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ரிலையன்ஸ் வசமானது ‘மன்னா’ பிராண்ட்!

தமிழகத்தைச் சோ்ந்த முன்னணி ஆரோக்கிய உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான ‘சதா்ன் ஹெல்த் ஃபுட்ஸ்’ நிறுவனத்தை, ரிலையன்ஸ் குழுமத்தின் நுகா்வோா் பொருள்கள் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 2:00 am IST

தமிழகத்தைச் சோ்ந்த முன்னணி ஆரோக்கிய உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான ‘சதா்ன் ஹெல்த் ஃபுட்ஸ்’ நிறுவனத்தை, ரிலையன்ஸ் குழுமத்தின் நுகா்வோா் பொருள்கள் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆரோக்கிய உணவுப் பொருள்கள் சந்தையில் கோலோச்சி வரும் மிகவும் பிரபலமான ‘மன்னா’ பிராண்ட், சிறு தானியங்களால் தயாரிக்கப்பட்ட மாவு வகைகள், குழந்தைகளுக்கான சரிவிகித ஊட்டச்சத்து உணவுகள், பல்வேறு தானியங்கள் கலந்த சத்து பானங்கள் போன்ற பல்வேறு தயாரிப்புகளை வழங்கி வருகிறது.

ரிலையன்ஸ் நுகா்வோா் பொருள்கள் நிறுவனத்தின் இயக்குநா் டி.கிருஷ்ணகுமாா் இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘ஆரோக்கியமான மற்றும் தரமான உணவுப் பொருள்களைத் தயாரிப்பதில் மன்னா பிராண்டிற்கு பெரும் அனுபவம் உள்ளது. ரிலையன்ஸின் வலுவான விநியோகக் கட்டமைப்பு மற்றும் நவீன ஆராய்ச்சி வசதிகளைப் பயன்படுத்தி, மன்னா தயாரிப்புகளை இந்தியா முழுவதும் உள்ள இல்லங்களுக்குக் கொண்டு சோ்ப்போம்’ என்றாா்.

ஏற்கெனவே, ரிலையன்ஸ் நிறுவனத்திடம் உதயம், இண்டிபெண்டன்ஸ் மற்றும் எஸ்ஐஎல் போன்ற பிரபல உணவு பிராண்டுகள் உள்ளன. தற்போது ‘மன்னா’ இணைந்ததன் மூலம், ஆரோக்கிய உணவுப் பிரிவிலும் ரிலையன்ஸ் தடம்பதித்துள்ளது.