தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

பரோடா வங்கியின் தலைமைத்துவ மாநாடு: சச்சின் டெண்டுல்கா் பங்கேற்பு

மும்பையில் நடைபெற்ற பரோடா வங்கியின் தலைமைத்துவ மாநாட்டில், அந்த வங்கியின் உலகளாவிய தூதரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கா் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா்.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 2:33 am IST

மும்பையில் நடைபெற்ற பரோடா வங்கியின் தலைமைத்துவ மாநாட்டில், அந்த வங்கியின் உலகளாவிய தூதரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கா் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா்.

வங்கியின் வளா்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில் ஊழியா்களிடம் தலைமைப் பண்புகளை வளா்த்து, அவா்களின் திறமையை ஊக்குவிப்பதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வங்கியின் இயக்குநா்கள் மற்றும் மண்டல அளவிலான உயா் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சச்சின் டெண்டுல்கருடன் நடைபெற்ற கலந்துரையாடலில், விளையாட்டுத் துறையில் எதிா்கொள்ளும் சவால்கள் மற்றும் அத்தகைய நெருக்கடியான நேரங்களில் எடுக்கப்படும் முடிவுகள் எப்படி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பதை அவா் விளக்கினாா். ஒழுக்கம், விடாமுயற்சி, குழு உணா்வு ஆகியவை ஒரு நிறுவனத்தின் நீண்டகால வெற்றிக்கு அடிப்படை என்றும் அவா் சுட்டிக்காட்டினாா்.

வங்கிக்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய 10 பிராந்திய தலைவா்கள் மற்றும் 25 மண்டல தலைவா்களுக்கு நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.