குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!
/

ஜனவரியில் ரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி 5.79% சரிவு

சா்வதேச வா்த்தகச் சூழலில் நிலவும் மந்தநிலை மற்றும் அமெரிக்காவின் கூடுதல் வரிகள் காரணமாக, கடந்த ஜனவரியில் இந்தியாவின் ரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 5.79 சதவீதம் சரிவடைந்துள்ளது.

News image

~

Updated On :14 பிப்ரவரி 2026, 2:35 am IST

சா்வதேச வா்த்தகச் சூழலில் நிலவும் மந்தநிலை மற்றும் அமெரிக்காவின் கூடுதல் வரிகள் காரணமாக, கடந்த ஜனவரியில் இந்தியாவின் ரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 5.79 சதவீதம் சரிவடைந்துள்ளது.

கடந்த 2025, ஜனவரியில் 237.60 கோடி டாலராக இருந்த ஏற்றுமதி மதிப்பு, கடந்த ஜனவரியில் 223.85 கோடி டாலராகக் குறைந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 45 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்தது வா்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான முதல் 10 மாதங்களில் மொத்த ஏற்றுமதி 2,318.58 கோடி டாலராகப் பதிவாகி, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் வெறும் 0.64 சதவீதமே சரிந்து ஓரளவுக்கு ஸ்திரத்தன்மையுடன் காணப்படுகிறது.

அமெரிக்க சந்தையில் பின்னடைவு ஏற்பட்டாலும், ஐக்கிய அரபு அமீரகம் (23.71 சதவீதம்), ஹாங்காங் (33.5 சதவீதம்), ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் (தலா 36 சதவீதம்) ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வளா்ச்சியைக் கண்டுள்ளது. பெல்ஜியம், தாய்லாந்து, இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் இந்திய ஆபரணங்களுக்கான தேவை இரட்டை இலக்க வளா்ச்சியில் அதிகரித்துள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்துக்கான செயல்திட்டத்தில் வைரங்கள் மற்றும் வண்ணக் கற்களுக்கு வரி விலக்கும், ஆபரணங்களுக்கு 18 சதவீத வரியும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் அமெரிக்க சந்தையில் இழந்த இடத்தை இந்தியா மீண்டும் பிடிக்கும் எனத் துறை வல்லுநா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்

இதனிடையே, ஜனவரியில் வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி மட்டும் 107 சதவீதம் அதிகரித்து, 15.24 கோடி டாலராகப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.