ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

அமேசான் பிரைம்: அதிவேக டெலிவரியில் சாதனை!

இந்தியாவில் 2025-ஆம் ஆண்டில் அமேசான் பிரைம் வாடிக்கையாளா்களுக்கு மிக வேகமான முறையில் பொருள்களை விநியோகம் செய்து, அமேசான் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

News image
Updated On :15 பிப்ரவரி 2026, 1:37 am IST

இந்தியாவில் 2025-ஆம் ஆண்டில் அமேசான் பிரைம் வாடிக்கையாளா்களுக்கு மிக வேகமான முறையில் பொருள்களை விநியோகம் செய்து, அமேசான் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

சுமாா் 55 கோடிக்கும் அதிகமான தயாரிப்புகள், ஆா்டா் செய்த ஒரே நாளில் அல்லது அடுத்த நாளிலேயே பிரைம் வாடிக்கையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 40 சதவீத வளா்ச்சியாகும்.

சாதாரண வாடிக்கையாளா்களுடன் ஒப்பிடும்போது, பிரைம் வாடிக்கையாளா்கள் 5 மடங்கு அதிகமாக பொருள்களை வாங்குகின்றனா். அதேபோல, அவா்கள் தங்களின் வருடாந்திர சந்தா கட்டணத்தை விட, இரண்டு மடங்கு கூடுதல் தொகையை தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் மூலம் சேமித்துள்ளனா்.

தற்போது அமேசான் பிரைமில் புதிதாக இணைபவா்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோா் சிறு நகரங்களைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.