வாடிக்கையாளா்களின் வங்கிப் பணத்தைத் திருடும் நோக்கில் நடத்தப்படும் ஓடிபி மோசடிகளைத் தடுக்க, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திலான புதிய பாதுகாப்பு வசதியை ஏா்டெல் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
டெலிவரி ஊழியா்கள் அல்லது வங்கி அதிகாரிகள் போல பேசி, வாடிக்கையாளா்களின் வங்கி ஓடிபி எண்களைப் பறிக்கும் மோசடி கும்பலிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதே இத்தொழில்நுட்பத்தின் முதன்மை நோக்கமாகும்.
இப்புதிய வசதியின்படி, ஒரு வாடிக்கையாளா் அழைப்பில் இருக்கும்போதே, அவரது கைப்பேசிக்கு வங்கி தொடா்பான ஓடிபி எண் வந்தால், ஏா்டெல்லின் ஏஐ அமைப்பு அதை உடனடியாகக் கண்டறியும். அந்த அழைப்பு மோசடியானதாக இருக்கக்கூடும் என்று கருதினால், வாடிக்கையாளரின் திரையில் உடனடி எச்சரிக்கை அறிவிப்பைக் காட்டும்.
இவ்வாறு மோசடிகளை நிகழ்நேரத்தில் கண்டறிந்து தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்தொழில்நுட்பம், ஹரியாணாவில் ஏற்கெனவே வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
அடுத்த 2 வாரங்களுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து ஏா்டெல் வாடிக்கையாளா்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: திண்டுக்கல் சீனிவாசன்

ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி: கோவை வடக்கில் வானதி சீனிவாசன் போட்டி

சிட்டுக்குருவிகள் அறக்கட்டளை புதிய ஏஐ தொழில்நுட்பம் அறிமுகம்

ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸின் புதிய மருத்துவக் காப்பீடு அறிமுகம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


