தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஸ்பிக் 3வது காலாண்டு லாபம் ரூ.54.07 கோடி!

ஸ்பிக் நிறுவனம், தனது 3வது காலாண்டில் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.54.07 கோடியாக இருப்பதாக இன்று தெரிவித்துள்ளது.

News image
சதர்ன் பெட்ரோ கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்
Updated On :14 பிப்ரவரி 2026, 12:14 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய உர உற்பத்தி நிறுவனமாகும் ஸ்பிக். விவசாயிகளுக்கு தேவையான உரங்களை வழங்குவதில் இந்நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது.

3வது காலாண்டில் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.54.07 கோடியாக இருப்பதாக தெரிவித்தது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனம் ரூ.38.50 கோடி நிகர லாபம் ஈட்டியது.

டிசம்பர் 2025, உடன் முடிவடைந்த 9 மாத காலாண்டில், வரிக்குப் பிந்தைய நிகர லாபம் ரூ.182.01 கோடியாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு, இதே காலத்தில் இது ரூ.136.22 கோடியாக இருந்தது.

மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் செயல்பாடுகளிலிருந்து வந்த மொத்த வருமானம் ரூ.778.39 கோடியாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.823.23 கோடியாக இருந்தது.

டிசம்பர் 31, 2025 உடன் முடிவடைந்த 9 மாத காலத்தில், மொத்த வருமானம் கடந்த நிதியாண்டில் ரூ.2,340.82 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.2,419.36 கோடியாக உயர்ந்துள்ளது.

summary

Southern Petrochemicals Industries Corporation Ltd has reported a consolidated net profit after tax of Rs 54.07 crore for the October-December 2025 quarter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.