புதுதில்லி: கடந்த வார வர்த்தகத்தில், டாப் 10 மதிப்புள்ள ஆறு நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் சரிந்தது முதலீட்டாளர்களை அச்சத்தில் தள்ளியது.
பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் மத்தியில், ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை மிகவும் பின்தங்கிய நிறுவனங்களாக உருவெடுத்தன.
இந்நிலையில், கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் சுமார் 1.14 சதவீதம் வரை சரிந்தன.
டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல்ஐசி மற்றும் பாரதி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் மதிப்பீட்டு அளவில் சரிவை எதிர்கொண்டன. அதே நேரத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், லார்சன் & டூப்ரோ மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை உயர்ந்தன.
டிசிஎஸ் சந்தை மதிப்பீடு ரூ.90,198.92 கோடி சரிந்து ரூ.9,74,043.43 கோடியாகவும், இன்போசிஸ் சந்தை மதிப்பீடு ரூ.70,780.23 கோடி சரிந்து ரூ.5,55,287.72 கோடியாகவும், ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பீடு ரூ.54,627.71 கோடி சரிந்து ரூ.13,93,621.92 கோடியாகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பீடு ரூ.41,883 கோடி சரிந்து ரூ.19,21,475.79 கோடியாக உள்ளது.
எல்ஐசி-யின் சந்தை மூலதனம் ரூ.23,971.74 கோடி சரிந்து ரூ.5,46,226.80 கோடியாகவும், பாரதி ஏர்டெல்லின் சந்தை மூலதனம் ரூ.19,244.61 கோடி சரிந்து ரூ.11,43,044.03 கோடியாக உள்ளது.
இருப்பினும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் மதிப்பீடு ரூ.1,22,213.38 கோடி உயர்ந்து ரூ.11,06,566.44 கோடியாகவும், பஜாஜ் ஃபைனான்ஸின் சந்தை மூலதனம் ரூ.26,414.44 கோடி உயர்ந்து ரூ.6,37,244.64 கோடியாகவும், லார்சன் & டூப்ரோவின் சந்தை மூலதனம் ரூ.14,483.9 கோடி உயர்ந்து ரூ.5,74,028.93 கோடியாகவும், ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் ரூ.5,719.95 கோடி உயர்ந்து ரூ.10,11,978.77 கோடியாகவும் உள்ளது.
Summary
The combined market valuation of six of the top 10 valued firms eroded by more than Rs 3 lakh crore last week.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!!

மதிப்புமிக்க 8 நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 4.13 லட்சம் கோடியாக உயர்வு!

மதிப்புமிக்க 6 நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 65,000 கோடியாக சரிவு!

மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 1.75 லட்சம் கோடியாக சரிவு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




