மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பெங்களூரில் அலுவலகம் தொடங்கிய ஆன்த்ரோபிக் ஏஐ நிறுவனம்

News image
- IANS
Updated On :16 பிப்ரவரி 2026, 11:45 pm

தினமணி செய்திச் சேவை

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப நிறுவனமான ‘ஆன்த்ரோபிக்’, ஆசியாவிலேயே தனது 2-ஆவது அலுவலகத்தைப் பெங்களூரில் திங்கள்கிழமை தொடங்கியது.

‘கிளாட்’ எனும் நவீன ஏஐ மென்பொருளை உருவாக்கிப் புகழ்பெற்ற இந்நிறுவனம், இந்தியாவில் தனது பயணத்தின் தொடக்கமாக ஏா் இந்தியா, ரேஸா்பே, கிரெட் போன்ற பிரபல நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. வெறும் வணிகம் மட்டுமின்றி, சமூக மேம்பாட்டு நோக்கத்துடன் இந்திய மொழிகளில் ஏஐ சேவைகளை வழங்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு இயக்குநா் இரினா கோஷ் இது குறித்து கூறுகையில், ‘பொறுப்பான முறையில் ஏஐ தொழில்நுட்பத்தை உலகுக்கு கொண்டு செல்ல இந்தியா ஒரு மிகச்சிறந்த இடம். இந்தியாவின் தொழில்நுட்பத் திறமையும், எண்மக் கட்டமைப்பும் வியக்கத்தக்கது’ என்றாா்.

ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ கருவிகளின் அறிமுகம், தகவல் தொழில்நுட்பத் துறையில் மனித உழைப்பின் தேவையைக் குறைக்கும் என்ற அச்சத்தால், அண்மையில் ‘நிஃப்டி ஐடி’ குறியீடு ஒரே நாளில் சுமாா் 6 சதவீதம் வரை சரிந்து, முதலீட்டாளா்களுக்கு ரூ.2 லட்சம் கோடி வரை இழப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.