மும்பை பங்குச் சந்தை
மும்பை பங்குச் சந்தை(சித்திரிப்பு)

இரண்டு நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட இந்திய பங்குச் சந்தை!

சென்செக்ஸ் 650.39 புள்ளிகள் உயர்ந்து 83,277.15 ஆகவும், நிஃப்டி 211.65 புள்ளிகள் உயர்ந்து 25,682.75 ஆகவும் நிலைபெற்றது.
Published on

மும்பை: இந்திய குறியீடுகள், கடந்த இரண்டு நாள் தொடர் சரிவை முறித்துக் கொண்டு, இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில் உயர்ந்து முடிவடைந்தன.

நிஃப்டி குறியீடு 25,650 புள்ளிகளுக்கு மேல் சென்று முடிவடைந்த நிலையில், மின்சாரம், எரிசக்தி, ரியல் எஸ்டேட் மற்றும் நிதி பங்குகளில் முதலீட்டாளர்கள் கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டியதால், இன்றைய இன்ட்ராடே வர்த்தகத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், முடிவில் பங்குச் சந்தை உயர்ந்தன.

இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் நிஃப்டி 25,400 புள்ளிகளுக்குக் கீழே சென்ற நிலையில் பிறகு மீண்டது. வர்த்க முடிவில், சென்செக்ஸ் 650.39 புள்ளிகள் உயர்ந்து 83,277.15 ஆகவும், நிஃப்டி 211.65 புள்ளிகள் உயர்ந்து 25,682.75 ஆகவும் நிலைபெற்றது.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.5 சதவீதம் உயர்ந்த நிலையில், ஸ்மால்கேப் குறியீடு பெரும்பாலும் மாறாமல் இருந்தன.

சென்செக்ஸில் பவர் கிரிட் 4.45 சதவீதம் உயர்ந்து அதிக லாபம் ஈட்டியதை தொடர்ந்து ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, ஐடிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பாரதி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், கோட்டக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன. மறுபுறம் டெக் மஹிந்திரா, மாருதி சுசுகி இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், டிரென்ட், மஹிந்திரா & மஹிந்திரா, டைட்டன், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை பங்குகள் சரிந்தன.

நிஃப்டி-யில் பவர் கிரிட் கார்ப்பரேஷன், கோல் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் மேக்ஸ் ஹெல்த்கேர் ஆகியவை உயர்ந்த நிலையில் மறுபுறம் டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுசுகி, ஐஷர் மோட்டார்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.

துறை ரீதியாக இன்று, மின்சாரம், பொதுத்துறை வங்கி, ரியல் எஸ்டேட், தனியார் வங்கி, இன்ஃப்ரா, எரிசக்தி குறியீடுகள் தலா 1 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்த நிலையில் மீடியா மற்றும் ஆட்டோ துறை பங்குகள் 0.5 முதல் 1% வரை சரிந்தன. 500 கோடி வரை மூலதனத்தை திரட்டும் திட்டம் முன் வைத்ததால் ஈஸி டிரிப் பிளானர்ஸ் பங்குகள் 20% உயர்ந்தன.

பிரைன்பீஸ் சொல்யூஷன்ஸ், ப்ளூ ஜெட், ஓலா எலக்ட்ரிக், ஐனாக்ஸ் விண்ட், சி. இ. இன்ஃபோ, செல்லோ வேர்ல்ட், வேதாந்த் ஃபேஷன்ஸ், ஜஸ்ட் டயல், ரிலாக்ஸோ ஃபுட்வேர், ஃபர்ஸ்ட்சோர்ஸ் சொல்யூஷன்ஸ், கிளீன் சயின்ஸ், டாடா கெமிக்கல்ஸ், கேஇசி இன்டர்நேஷனல், எல்டி டெக்னாலஜி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று 52 வாரக் குறைந்த விலையை தொட்டது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், 0.24 சதவீதம் சரிந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 67.59 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

Summary

Indian benchmark indices snapped their two-day losing streak and ended higher in a volatile session on February 16, with the Nifty finishing above the 25,650.

மும்பை பங்குச் சந்தை
இருசக்கர வாகன பிரிவில் வளர்ச்சியை அதிகரிக்க ஹீரோ மோட்டோகார்ப் திட்டம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com