

புதுதில்லி: மாருதி சுசுகி இந்தியா தனது முதல் மின்சார வாகனமான இ-விட்டாராவை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
மின்சார வாகனமான இ-விட்டாரா, பேட்டரி-ஆஸ்-எ-சர்வீஸ் (Battery-as-a-Service) உரிமைத் திட்டத்துடன் 10.99 லட்சத்தில் அறிமுகமாகி உள்ளது.
இ-விட்டாரா, 61 kWh மற்றும் 49 kWh பேட்டரி பேக் விருப்பங்களுடன், ஒரு முறை சார்ஜ் செய்தால் 543 கிலோ மீட்டருக்கும் அதிகமான வரம்பை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதே வேளையில், வாகனத்துடன் 7.4 கிலோவாட் ஏசி (AC) வால் பாக்ஸ் சார்ஜரை இலவசமாகப் பெறுவார் என்றது. இது வாடிக்கையாளர்கள் எங்கள் மீதான நம்பகத்தன்மையை எடுத்து காட்டுகிறதாக மாருதி சுசுகி இந்தியாவின் மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், மாருதி சுசுகி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஹிசாஷி டேகுச்சி, சுசுகியின் உலகளாவிய தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து, மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
வாகன சிறப்பம்சங்கள்
எல்இடி டிஆர்எல்-கள், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 18-இன்ச் அலாய் வீல்கள், லெவல் 2 அடாஸ் (ADAS), 360-டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், 10 வழிகளில் பவர்-அட்ஜஸ்ட் வசதி கொண்ட டிரைவர் இருக்கை, வயர்லெஸ் சார்ஜிங், டிரைவ் மோடுகள், சுசுகி கனெக்ட், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், டூயல் 10-இன்ச் ஸ்கிரீன்கள், ஏழு ஏர்பேக்குகள், ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், யூஎஸ்பி போர்ட்கள் மற்றும் கேபின் ஏர் ப்யூரிஃபையர் உள்ளிட்ட அம்சங்கள் பெறுகிறது.
பாதுகாப்பு பொறுத்தவரை, ஏபிஎஸ், ஈபிடி, இஎஸ்பி, 360-டிகிரி கேமரா மற்றும் லேன் கீப் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட் உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
வாகனம் 4,275 மிமீ நீளமும், 1,800 மிமீ அகலம், 1,635 மிமீ உயரம், 2,700 மிமீ வீல் பேஸ் மற்றும் 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாகவும் 1,900 கிலோ வரை எடை கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.