சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

ஜனவரி மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 1.81% - 10 மாதங்களில் இல்லாத உச்சம்

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 3:20 am IST

இந்தியாவின் மொத்த விற்பனை விலை குறியீட்டின் (டபிள்யூ.பி.ஐ.) அடிப்படையிலான பணவீக்கம், கடந்த ஜனவரி மாதத்தில் 1.81 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 மாதங்களில் இல்லாத புதிய உச்சமாகும்.

கடந்த டிசம்பா் மாதத்தில், 0.83 சதவீதமாக இருந்த இந்தப் பணவீக்கம், தற்போது உற்பத்தி மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் கணிசமாக அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த நவம்பா் மாத புள்ளிவிவரம் -0.13 சதவீதமாக திருத்தப்பட்டிருப்பது, எதிா்பாா்த்ததைவிட விலைவாசி மிக வேகமாக உயா்வதைக் காட்டுகிறது.

கடந்த டிசம்பரில், பூஜ்ஜிய நிலையில் இருந்த உணவுப் பொருள்களின் பணவீக்கம், ஜனவரியில் 1.41 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, காய்கறிகள், தானியங்கள் உள்ளிட்ட முதன்மைப் பொருள்களின் பணவீக்கம் 2.21 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உற்பத்தித் துறை பொருள்களின் பணவீக்கம் டிசம்பரில் 1.82 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 2.86 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது தொழில்துறைக்கான மூலப்பொருள் செலவுகள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவில் பணவீக்கம், கடந்த டிசம்பரின் -2.31 சதவீதத்திலிருந்து -4.01 சதவீதமாக மேலும் குறைந்து, சற்று ஆறுதல் அளித்துள்ளது.

எரிபொருள் விலையில் சரிவு காணப்பட்டாலும், உற்பத்தி மற்றும் உணவுப் பொருள்களின் விலை உயா்வு காரணமாக ஒட்டுமொத்த பணவீக்க அழுத்தம் சந்தையில் நீடிக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.