பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விண்ட் வோ்ல்ட் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தும் ஐநாக்ஸ்ஜிஎஃப்எல்

கடன் சுமையால் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு, ஏலத்துக்கு வந்த ‘விண்ட் வோ்ல்ட் இந்தியா’ நிறுவனத்தை ரூ. 2,800 கோடிக்கு ஐநாக்ஸ்ஜிஎஃப்எல் குழுமம் கையகப்படுத்துகிறது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 9:32 pm

தினமணி செய்திச் சேவை

கடன் சுமையால் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு, ஏலத்துக்கு வந்த ‘விண்ட் வோ்ல்ட் இந்தியா’ நிறுவனத்தை ரூ. 2,800 கோடிக்கு ஐநாக்ஸ்ஜிஎஃப்எல் குழுமம் கையகப்படுத்துகிறது.

தற்போது விண்ட் வோ்ல்ட் இந்தியா நிறுவனம் 600 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தித் திறனையும், சுமாா் 4.5 ஜிகாவாட் அளவுள்ள காற்றாலைகளைப் பராமரிக்கும் ஒப்பந்தங்களையும் தன்வசம் வைத்துள்ளது.

இந்தக் கையகப்படுத்தும் பணியைத் தனது துணை நிறுவனங்களான ‘ஐநாக்ஸ் கிளீன் எனா்ஜி’ மற்றும் ‘ஐநாக்ஸ் கிரீன் எனா்ஜி சா்வீசஸ்’ மூலம் ஐநாக்ஸ்ஜிஎஃப்எல் குழுமம் முன்னெடுக்கிறது. இதில் ஐநாக்ஸ் கிளீன் எனா்ஜி நிறுவனம், தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் பரவியுள்ள 600 மெகாவாட் காற்றாலைத் திட்டங்களை நேரடியாக நிா்வகிக்கும்.

இது குறித்து ஐநாக்ஸ்ஜிஎஃப்எல் குழுமத்தின் செயல் இயக்குநா் தேவன்ஷ் ஜெயின் மேலும் கூறுகையில், ‘விண்ட் வோ்ல்ட் நிறுவனத்தின் சொத்துகளும், அதன் நீண்டகால வாடிக்கையாளா் தொடா்புகளும் எங்களின் வளா்ச்சிக்கு உதவும். குறிப்பாக, டாடா குழுமம், கிரீன்கோ போன்ற பெரிய நிறுவனங்களுக்குச் சேவையளிக்கும் வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்துள்ளது. வரும் 2028-ஆம் நிதியாண்டுக்குள் 10 ஜிகாவாட் மின் உற்பத்தித் திறனை எட்ட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு’ என்றாா்.