பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வங்கி, உலோகப் பங்குகள் உயர்வு எதிரொலி: இந்தியப் பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு!

சென்செக்ஸ் 316.57 புள்ளிகள் உயர்ந்து 82,814.71 ஆகவும், நிஃப்டி 116.90 புள்ளிகள் உயர்ந்து 25,571.25 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image

மும்பை பங்குச் சந்தை

கோப்புப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 12:47 pm

தினமணி செய்திச் சேவை

மும்பை: அமெரிக்கா-ஈரான் பதற்றங்கள், உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் ஐடி பங்குகளின் ஏற்பட்ட பலவீனம் ஆகியவற்றால், மந்தமான தொடக்கத்திற்குப் பிறகு, குறியீடுகள் மீண்ட நிலையில், முடிவில் உயர்ந்தன.

இன்றைய வர்த்தகத்தில், நிஃப்டி 209.2 புள்ளிகள் உயர்ந்து 25,663.55 என்ற உச்சத்தை எட்டிய நிலையில் சென்செக்ஸ் 0.76 சதவீதம் உயர்ந்து 83,132.08 என்ற இன்ட்ராடே உயர்வை எட்டியது.

வர்த்தக முடிவில், 30-பங்கு கொண்ட சென்செக்ஸ் 316.57 புள்ளிகள் உயர்ந்து 82,814.71 ஆகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 116.90 புள்ளிகள் உயர்ந்து 25,571.25 புள்ளிகளாக நிலைபெற்றது.

நிஃப்டி-யில் 3,248 பங்குகள் வர்த்தகமான நிலையில், 1,520 பங்குகள் உயரந்தும் 1,621 பங்குகள் சரிந்தும் 107 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.

சென்செக்ஸில் என்டிபிசி, லார்சன் & டூப்ரோ, இந்துஸ்தான் யூனிலீவர், பவர் கிரிட், டாடா ஸ்டீல், கோடக் மஹிந்திரா வங்கி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன், மாருதி சுசுகி இந்தியா, ஆக்சிஸ் வங்கி மற்றும் இண்டிகோ உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த நிலையில் மறுபுறம் டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், எடர்னல், எச்.சி.எல் டெக்னாலஜிஸ், பாரதி ஏர்டெல், எச்.டி.எஃப்.சி வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை சரிந்தன.

தெளிவான வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் ஏஐ உள்ளிட்ட முக்கியமான கனிம விநியோகச் சங்கிலி பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் பாக்ஸ் சிலிக்காவில் இந்தியா நுழைந்ததால் முதலீட்டாளர்களின் மனநிலை மேம்பட்டது.

அரசியல் பதற்றங்கள் நீடித்தாலும், வங்கி மற்றும் உலோகப் பங்குகள் மீட்சிக்கு உந்துதலாக இருந்தன. ஐடி பங்குகள் இன்று பின்தங்கியது.

ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு 1.10 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 225 அளவுகோல் 1.07 சதவீதமும் சரிந்த நிலையில் தென் கொரியாவின் கோஸ்பி 2.31 சதவீதம் உயர்ந்தன. சந்திர புத்தாண்டை முன்னிட்டு சீனாவின் பிரதான சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

ஐரோப்பிய சந்தைகளில், ஜெர்மனியின் டாக்ஸ் (DAX), பாரிஸின் சிஏசி (CAC) 40 மற்றும் லண்டனின் எஃப்டிஎஸ்இ (FTSE) 100 உள்ளிட்டவை 1 சதவீதம் உயர்ந்தன. அமெரிக்க பங்குச் சந்தைகள் நேற்றறைய வர்த்தகத்தில் சரிந்து முடிவடைந்தன.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.880.49 கோடி மதிப்புள்ள பங்குகளையும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் ரூ.596.28 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்ததுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு ஒன்றுக்கு 0.31 சதவீதம் குறைந்து 71.44 அமெரிக்க டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.