2025 போல தங்கம் விலை 2026-ல் இருக்காது! ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

தங்கம் விலை 2025 போல 2026-ல் இருக்காது என்கிறார் ஆனந்த் ஸ்ரீனிவாசன்
gold rate
தங்கம் விலை நிலவரம்
Updated on
1 min read

புத்தாண்டு பிறந்திருக்கிறது. பலருக்கும் இந்த ஆண்டு எப்படி இருக்கப்போகிறதோ என்ற கவலை. சிலருக்கு இந்த ஆண்டு தங்கம் விலை எப்படி இருக்கும்? என்பது கவலை.

சர்வதேச பொருளாதாரக் காரணிகளின் அடிப்படையில் தங்கம் விலை கடந்த 2025ஆம் ஆண்டில் வரலாறு காணாத வளர்ச்சியை அடைந்தது. அதனுடனே சேர்ந்து வெள்ளியும் விலை உயர்ந்து ஏழைகளின் உலோகம் என்ற பெருமையையும் இழந்துவிட்டது.

கடந்த ஒரு சில மாதங்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 ஆயிரம் வரை உயர்ந்து, டிசம்பர் 15ஆம் தேதி ரூ.1 லட்சத்தை எட்டியது. அதன்பிறகு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

கடந்த ஆண்டு துவக்கத்தில் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 2025ஆம் ஆண்டு ஒரு ஜாக்பாட்தான். இந்த நிலையில், 2026 எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து பொருளாதார நிலவரங்கள் குறித்து மக்களுக்கு விளக்கம் அளித்து வரும் ஆனந்த் சீனிவாசன் ஒரு விடியோ வெளியிட்டுள்ளார். அதில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தபட்ச நிலையை எட்டியிருக்கிறது. இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் விலை இன்னும் கொஞ்சம் குறையலாம்.

கடந்த 1979ஆம் ஆண்டு தங்கம் விலை 2025 போன்ற உயர்வைக் கண்டது. அப்போது, அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி ஆளுநர் வோல்கர் வட்டி விகிதத்தை உயர்த்தி விலை உயர்வு மீது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தினார். அதன் பிறகு விலை உயர்வு கட்டுப்பட்டது. ஆனால், வோல்கர் போல இப்போது யாரும் இல்லை. ஃபெடரல் கூட்டத்தில் வட்டியை உயர்த்தவும், உயர்த்தக் கூடாது என்றும் இரு தரப்பு கடும் மோதலில் ஈடுபட்டது. எனவே, இந்த ஆண்டில் ஒரு சில முறைகள் மட்டும் குறைந்த அளவில் வட்டிக் குறைப்பு வேண்டுமானால் நிகழலாம்.

தங்கம் விலை என்பது, அமெரிக்க வட்டிக் குறைப்பை பொறுத்துத்தான் அமைகிறது. ஒருவேளை, இரண்டு முறை வட்டி குறைக்கப்பட்டால் இந்த 2026ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை உயராமல் ரூ.14 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை போகலாம். அதற்கு மேல் உயருமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், 2025ஆம் ஆண்டு கிடைத்ததைப் போன்ற லாபம் கிடைக்குமா என்பது சந்தேகமே என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தகவல்கள் பொதுவானவைதான் என்றும் அவரவர் சொந்த முதலீட்டு வாய்ப்புகள் குறித்து தனிப்பட்ட முறையில் பொருளாதார ஆலோசகர்களின் ஆலோசனையைப் பெறலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com