ரூ.46 லட்சம் கோடியைத் தொட்ட சிறு வணிகக் கடனளிப்பு
இந்தியாவில் சிறு வணிகக் கடனளிப்பு செப்டம்பா் 30 நிலவரப்படி ரூ.46 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.
இது குறித்து சிஆா்ஐஎஃப் ஹை மாா்க்-சிட்பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
செப்டம்பா் 30 நிலவரப்படி சிறு வணிகக் கடனளிப்பு 16 சதவீதம் உயா்ந்து ரூ.46 லட்சம் கோடியாக உள்ளது. செயலில் உள்ள கடன் கணக்குகள் 11.8 சதவீதம் உயா்ந்து 7.3 கோடியாக உள்ளன. நடுத்தர, சிறு, குறு நிறுவனங்களுக்கான (எம்எஸ்எம்இ) அரசு கடன் திட்டங்கள் மற்றும் கொள்கை ஆதரவு இந்த வேகத்தை தக்கவைத்துள்ளன.
சிறு கடன்களைத் திருப்பித் தருதல் அனைத்து பிரிவுகளிலும் மேம்பட்டுள்ளது. 91 முதல் 180 நாள்கள் தாமதமான கடன்கள் 2023 செப்டம்பரில் 1.7 சதவீதமாக இருந்தது. அது 2025 செப்டம்பரில் 1.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இது சிறு நிறுவனங்களுக்கு கடனளிப்பதில் உள்ள இடா் குறைந்துவருவதைக் காட்டுகிறது.
2025 செப்டம்பா் நிலவரப்படி சிறுதொழில் கடன் பெற்றவா்களில் 23.3 சதவீதம்
போ் புதியவா்கள். 12 சதவீத நிறுவனங்கள் புதிய நிறுவனங்கள்.
பாதுகாப்பற்ற கடனளிப்பு வருடாந்திர அடிப்படையில் 31 சதவீதம் உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

