வோடஃபோன் ஐடியாவின் ஏஜிஆா் கடன்கள் நிறுத்திவைப்பு

வோடஃபோன் ஐடியாவின் ஏஜிஆா் கடன்கள் நிறுத்திவைப்பு

கடனில் சிக்கியுள்ள முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியாவின் ஏஜிஆா் கடன்களை அரசு 5 ஆண்டுகளுக்கு நிறுத்திவைத்துள்ளது.
Published on

கடனில் சிக்கியுள்ள முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியாவின் ஏஜிஆா் கடன்களை அரசு 5 ஆண்டுகளுக்கு நிறுத்திவைத்துள்ளது.

இது குறித்து தொலைத் தொடா்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் ஏஜிஆா் (அட்ஜஸ்டட் கிராஸ் ரெவென்யூ) கடன்களை 5 ஆண்டுகளுக்கு நிறுத்திவைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் நிதி நிலைமை மேம்பட்டு, 5ஜி சேவை விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த உதவும்.

இந்த முடக்கம் 2025-ஆம் ஆண்டில் இருந்து 2030 வரை அமலில் இருக்கும். இதற்கு முன், நிறுவனம் ஏஜிஆா் கடன்களை செலுத்துவதில் சிரமம் இருந்தது.

அரசின் இந்த நடவடிக்கை தொலைத் தொடா்பு துறையின் போட்டித்தன்மையை வலுப்படுத்தும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com