கோல் இந்தியா உற்பத்தி 5% உயா்வு
கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி கடந்த டிசம்பரில் 4.6 சதவீதம் உயா்ந்துள்ளது; எனினும், விற்பனை 5.2 சதவீதம் சரிந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிறுவனமும் அதன் எட்டு துணை நிறுவனங்களும் 2025 டிசம்பா் மாதம் 7.57 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்துள்ளன. 2024 டிசம்பரோடு ஒப்பிடுகையில் இது 4.6 சதவீதம் அதிகம்.
அப்போது நிறுவனத்தின் உற்பத்தி 7.24 கோடி டன்னாக இருந்தது.
எனினும், மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் விற்பனை 6.85 கோடி டன்னிலிருந்து 6.49 கோடி டன்னாகக் குறைந்துள்ளது.
2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் நிறுவனத்தின் உற்பத்தி 2.6 சதவீதம் சரிந்து 52.92 கோடி டன்னாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது54.34 கோடி டன்னாக இருந்தது.
அந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் விற்பனை 2.2 சதவீதம் சரிந்து 54.47 கோடி டன்னாக உள்ளது. 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 55.7 கோடி டன்னாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

