

தங்கம் விலை இன்று சற்று குறைந்து வணிகமாகி வருகிறது. வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை காலை சென்னையில் வணிகம் தொடங்கியதும், தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த டிச. 15ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தைத் தொட்ட நிலையில், இடையிடையே மீண்டும் ரூ.1 லட்சத்தைத் தொட்டுவிட்டு திரும்பி வருகிறது.
ஒரு சில நாள்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,640க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,00,160க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.12,520க்கு விற்பனையாகிறது.
தங்கம் உயரும்போது போட்டி போட்டுக் கொண்டு உயரும் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.256க்கு விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.4,000 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,56,000க்கு விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.