

புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான ஷோபா லிமிடெட், நிதியாண்டின் 3-வது காலாண்டில், வலுவான தேவை உள்ளிட்டவையால் அதன் விற்பனை முன்பதிவு 52% அதிகரித்து ரூ.2,115.2 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.
பெங்களூரை சேர்ந்த ஷோபா லிமிடெட், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.1,388.6 கோடி மதிப்புள்ள வீடுகளை விற்பனை செய்திருந்தது. அதே வேளையில், நிறுவனம் வரலாற்று சிறப்புமிக்க காலாண்டு செயல்திறனை வெளிப்படுத்தியதால், இதுவரை இல்லாத வகையில், அதிகபட்சமான வீடுகளை விற்பனை செய்து அதன் மதிப்பை ரூ.2,115 கோடியை எட்டியது.
விற்பனை பொறுத்தவரை, ஷோபா லிமிடெட், நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில் 13,70,340 சதுர அடி பரப்பளவை விற்பனை செய்தது. இதுவே கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட 10,16,367 சதுர அடியுடன் ஒப்பிடும்போது இது சற்று அதிகமாகும்.
மொத்த விற்பனையில், ஷோபா நிறுவனம் பெங்களூரில் ரூ.1,512 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும், தில்லி-என்சிஆர் சந்தையில் ரூ.349 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் விற்பனை செய்தது.
2025-26 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், ஷோபா லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை முன்பதிவுகள் 37% அதிகரித்து ரூ.6,096.7 கோடியாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.4,440.8 கோடியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.