

புதுதில்லி: சந்தையில் நிலவிய சாதகமான போக்கை தொடர்ந்து, ஊகத்தின் அடிப்படையில், வணிகர்கள் புதிய முதலீடுகளை மேற்கொண்டதால், ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் அலுமினியத்தின் விலை கிலோவுக்கு ரூ.2.40 உயர்ந்து ரூ.305.15 ஆக உள்ளது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், ஜனவரி மாத விநியோகத்திற்கான அலுமினியத்தின் விலை 4,024 லாட்டுகளில் ரூ.2.40 உயர்ந்து கிலோ ஒன்றுக்கு ரூ.305.15 ஆக உள்ளது.
பயன்பாட்டுத் தொழில்துறைகளின் தேவைக்கு மத்தியில் வர்த்தகர்களால் உருவாக்கப்பட்ட புதிய முதலீடுகள், ஃபியூச்சர்ஸ் சந்தையில் அலுமினியத்தின் விலையை உயர்த்தியதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.