

ஓப்போ ஏ6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓப்போ ஸ்மார்ட்போன்களில் இதுவரை இல்லாத வகையில் 7,000mAh பேட்டரி திறனுடன் அறிமுகமாகியுள்ளது.
சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓப்போ நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில், தங்கள் தயாரிப்பில் அதிக பேட்டரி திறனுடன் கூடிய புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய சந்தையில் இதன் விலை
8GB உள்நினைவகம் + 128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 21,999.
8GB உள்நினைவகம்+ 256GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 23,999.
சிறப்பம்சங்கள்
6.75 அங்குல எச்.டி., திரை கொண்டது.
திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz, 240Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளன.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 1,125 nits திறனுடையது.
ஆண்டிராய்டு 15 இயங்குதளம் கொண்டது.
மீடியாடெக் டைமன்சிட்டி 6300 புராசஸர் உடையது.
தங்க நிறம் மற்றும் காபி நிறம் என இரு வண்ணங்களில் கிடைக்கும்
இரு சிம் கார்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
50 மெகா பிக்சல் முதன்மை கேமராவும் 2 மெகா பிக்சல் மோனோ கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
செல்ஃபி பிரியர்களுக்காக 16 மெகா பிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டில் விரல் தொடுகை சென்சார் உடையது.
நீர் மற்றும் தூசி புகாத வகையில் IP69 திறன் உடையது.
7,000mAh பேட்டரி திறன். வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 80W திறன் வழங்கப்பட்டுள்ளது. 64 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகும் என ஓப்போ நம்பிக்கை வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.