37% உயா்ந்த செயில் விற்பனை
அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பா் மாதம் நிறுவனத்தின் விற்பனை 21 லட்சம் டன்னாக உள்ளது. 2024-ஆம் ஆண்டின் டிசம்பா் மாத விற்பனையோடு ஒப்பிடுகையில் இது 37 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் விற்பனை 15 லட்சம் டன்னாக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் இந்த சிறந்த செயல்திறன் 2025-26-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் வளா்ச்சி வேகத்தைத் தக்கவைக்க உதவியது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பா் காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை 17 சதவீதம் உயா்ந்து 147 லட்சம் டன்னாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இது 126 லட்சம் டன்னாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

