

புதுதில்லி: டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 3-வது காலாண்டில், டாடா குழுமத்தின் சில்லறை வர்த்தக நிறுவனமான ட்ரென்டின் வருவாய் வளர்ச்சி முதலீட்டாளர்களை ஈர்க்கத் தவறியதைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் அதன் பங்குகள் கிட்டத்தட்ட 9% சரிந்தன.
பிஎஸ்இ-யில் நிறுவனத்தின் பங்குகள் 8.62% சரிந்து ரூ.4,047.70 ஆக நிலைபெற்றது. இதுவே வர்த்தக நேரத்தின் போது 9.92% சரிந்து பங்கு ஒன்று ரூ.3,990 ஆக குறைந்தது.
என்எஸ்இ-யில் 8.62% சரிந்து பங்கு ஒன்று ரூ.4,047.60 ஆக இருந்தது.
இதனையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.13,570.73 கோடி குறைந்து ரூ.1,43,890.66 கோடியாக உள்ளது.
ட்ரென்ட் லிமிடெட், டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 3-வது காலாண்டில், அதன் தனிப்பட்ட வருவாயில் 17% வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ.5,220 கோடியாக இருப்பதாக அறிவித்தது.
கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.4,466 கோடி தனிப்பட்ட வருவாயைப் பதிவு செய்திருந்தது நிறுவனம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.