

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய மார்க்கெட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஓப்போ ரெனோ 15 சிரிஸ் ஸ்மார்ட்போன்கள் நாளை (ஜன.8) அறிமுகமாக இருக்கின்றன.
இந்த சீரிஸில் ஒப்போ ரெனோ 15 5ஜி மற்றும் ஒப்போ ரெனோ 15 புரோ 5ஜி என இரண்டு மாடல்களாக வெளியாகவிருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள், விலை எவ்வளவு, இந்த போனில் என்னென்ன எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
ஓப்போ ரெனோ 15 5ஜி புரோ
6.78 அங்குல திரை, பாதுகாப்பிற்காக ஒப்போ கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மிடியாடெக் டைமன்ஸிட்டி 8450 புராஸ்ஸர்
50 மெகா பிக்ஸல் கொண்ட முன்பக்க கேமரா
200 மெகா பிக்ஸல் கொண்ட பின்பக்க கேமரா + 50 மெகா பிக்ஸல் + 50 மெகா பிக்ஸல்
256 ஜிபி கொண்ட சேமிப்புத் திறன்
12 ஜிபி உள்நினைவகம்
6500 எம்ஏஹெச் மின்கலன்
ஓஎஸ்: ஆண்ட்ராய்டு 17
மிட்நைட் பிரவுன்/கோகோ பிரவுன், சன்செட் கோல்ட்/ஹனி கோல்ட் மற்றும் அரோரா ப்ளூ/ஸ்டார்லைட் பௌ உள்ளிட்ட வண்ணங்களிலும் கிடைக்கிறது.
இரண்டு நானோ சிம் போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
80 வாட் சூப்பர் சார்ஜருடன் டைப் சி போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்விலை: ரூ. 67,999 முதல் ரூ. 72,999 வரை இருக்கலாம்.
ஓப்போ ரெனோ 15 5ஜி
6.32 அங்குல திரை
ஆக்டாக்கோர் புராஸ்ஸர்
50 மெகா பிக்ஸல் கொண்ட முன்பக்க கேமரா
200 மெகா பிக்ஸல் கொண்ட பின்பக்க கேமரா + 50 மெகா பிக்ஸல் + 50 மெகா பிக்ஸல்
256 ஜிபி கொண்ட சேமிப்புத் திறன்
12 ஜிபி உள்நினைவகம்
6200 எம்ஏஹெச் மின்கலன்
இரண்டு நானோ சிம் போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
80 வாட் சூப்பர் சார்ஜருடன் டைப் சி போர்ட்.
இதன்விலை: ரூ. 45,999-ல் இருந்து துவங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.